Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபை, எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கான உறுப்பினர் தெரிவு தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
கொட்டகலை பிரதேச சபையின், முதலாவது அமர்வு அதன் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் நேற்று (25) இடம்பெற்றது.
இதன்போது நிதி, கொள்கைத் திட்டமிடல், வீடமைப்பு, சமூக அபிவிருத்தி, தொழில்நுட்பம், சுற்றாடல் மற்றும் சுகாதாரம் ஆகிய பிரிவுகளுக்கான குழுக்கள் நியமிக்கப்பட்டன. மேலும், குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை சபையில் தீர்மானிக்காது தனிப்பட்ட ரீதியில் தலைவர் ஊடாகவே தீர்மானிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஐ.தே.க உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த, சபையின் தலைவர், தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பெயர்களை நியமித்ததாகவும், உறுப்பினர் முன்வைத்த எதிர்ப்பினை ஏற்று அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதாகவும் அறிவித்தார்.
இதேவேளை, பிரதேச சபைக்கான கொடியும், இலட்சினையும் நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதேவேளை, கொட்டகலை பிரதேச சபை எல்லைப்பகுதிக்குள் கடந்த காலங்களில் இடப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் கம்பனிகளின் விளம்பர பலகைகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் அகற்றப்பட்டு பிரதேச சபை தீர்மானிக்கும் இடத்தில் மாத்திரமே விளம்பரப் பலகைகளை காட்சிப்படுத்த திட்டங்கள் வகுக்கவுள்ளதாக சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago