2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொட்டகலை விபத்தில் மூவர் படுகாயம்

Editorial   / 2021 மே 02 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என  திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த வான், கொட்டகலை பகுதியிலிருந்து கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வான், முச்சக்கரவண்டியை முட்டியதால், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கற்பாறையுடன் மோதி பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

வான், சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X