Kogilavani / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஷன் செனவிரத்ன
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில், கடந்த சனிக்கிழமை (13) உயிரிழந்த சிசு, கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளதாக பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேற்படி சிசுவின் பிசிஆர் அறிக்கை, நேற்று முன்தினம் (16) வெளியானபோதே, சிசு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி சிசுவுக்கு, நான்கு மாதத்துக்கான ஊசி, கடந்த 12 ஆம் திகதி ஏற்றப்பட்டுள்ளது. மறுதினம் காயச்சல் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது, சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், சிசுவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை நேற்று வெளியான போதே, சிசு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
11 minute ago
41 minute ago
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
41 minute ago
21 Jan 2026