2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொரோனா தொற்றினால் பெண் மரணம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.ஹேவா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ள நிலையில், அவருடன் தொடர்பைப் பேணியவர்களின் விவரங்களை, ஹட்டன்-டிக்கோயா நகரசபை பொதுசுகாதார பரிசோதகர்கள் திரட்டி வருகின்றனர்.

மேற்படி பெண் வேறு ஒரு சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்பைப் பேணியவர்களின் விவரங்களை, பொதுசுகாதார பரிசோதகர்கள் திரட்டி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X