2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கொரோனா தொற்றினால் வெலிமடையில் இரண்டாவது மரணம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வெலிமடையில் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளதாக, வெலிமடை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

வெலிமடை 4ஆம் மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயது நபரொருவரே, ஐடிஎச்சில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (20) இரவு உயிரிழந்துள்ளார் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர், காய்ச்சல் காரணமாக 31ஆம் திகதி வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது,  பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர்,  மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கொழும்பு ஐடிஎச்சுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெலிமடை குருத்தலாவ பகுதியில், கொவிட் 19 தொற்றினால் ஏற்கெனவே பெண்ணொருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X