2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொரோனாவுக்கு எதிராக நுவரெலியாவில் கடும் நடவடிக்கை

Niroshini   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

 

நுவரெலியா நகரில், கொரோனா தொடர்பான சுகாதார  சட்டவிதிகளை மீறுவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு, இன்று (28) காலை 10 மணிமுதல் கடுமையான நடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலகொடவின் பணிப்புரைக்கமைய, நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க உடுகம சூரிய தலைமையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென, ஐந்து பேர் கொண்ட 15 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டு, நுவரெலியா நகரில் காலை முதல் சுகாதார பின்பற்றல் மற்றும் கொரோனா தொடர்பான விழிபுணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், கொரோனா சட்ட விதிகளை மீறுவோறுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X