R.Maheshwary / 2022 பெப்ரவரி 06 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கத்துக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் தலவாக்கலை பகுதியில் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை மடக்கும்புர வடக்கு மலை பிரிவில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக நேற்று (05) இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முருகையா சரவணன் வயது 31 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணத் தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்;.
33 minute ago
1 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
29 Mar 2026