2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொவிட் தடுப்பூசிகளை இரத்தினபுரிக்கு துரிதமாக பெற்றுக்கொடுக்க தீர்மானம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கொரோனா தடுப்பூசிகளை இரத்தினபு மாவட்ட மக்களு துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கான தீர்மானமொன்று, இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி இணைப்புக் குழுக் கூட்டம் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.ஜே செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது டபிள்யூ. டீ. ஜே செனவிரத்ன எம்.பி, கொடக்கவெல பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த பண்டார ஆகியோர், இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கும் கொவிட் தடுப்புப் பணிகளுக்குமாக இரவு பகலாக போராடி வரும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தடுப்பூசியை துரிதமாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இது தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த அகில எல்லாவள எம்.பி, இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு, தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X