2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கோட்டா கோ கம கண்டி கிளையைத் தாக்கிய நால்வர் கைது

R.Maheshwary   / 2022 மே 11 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி நகரின் ஜோர்ஜ் டி சில்வா பூங்காவுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம கிளை மீது தாக்குதல் நடத்தி, மூவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தி குற்றச்சாட்டில் நால்வர் கண்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

9ஆம் திகதி  நடத்தப்பட்ட இத்தாக்குதலால் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான கண்டி நகர சபை உறுப்பினரான பொது ஜன பெரமுனவின் உறுப்பினர் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், நால்வர் நேற்று முன்தினம் (10) கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தலாத்துஓயா, லெவுல மற்றும் ஹந்தானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X