2026 மே 07, வியாழக்கிழமை

கோவில் திருவிழா பிற்போடப்பட்டது

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறத்தோட்டை ஸ்ரீ செல்விநாயகர் திருக்கோவிலின் வருடாந்தத் திருவிழா,  இம்முறை நடைபெறாது என்று, கோவிலின் நிர்வாக சபையின் தலைவர் கா.கருப்பையா ராஜா தெரிவித்தார்.

மேற்படிக் கோவிலின் வருடாந்தத் திருவிழா, திங்கட்கிழமை (23) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது என்றும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாவிட்டது என்றும் தெரிவித்த அவர், எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு திருவிழாவை நடத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவற்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் தீவிர நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியும் திருவிழா நடத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .