Sudharshini / 2016 ஜூன் 05 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையின் கினிகத்தேன பிரதேச மின்பொறியியலாளர் காரியாலயத்திலிருந்து, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் காணப்படுவதால், தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சிங்கள மொழியில் கடிதங்கள் வருவதால், அது குறித்த தெளிவற்ற நிலையில், தடுமாற்றம் அடைவதாகவும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் தண்டப்பணங்கள் செலுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுதொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் கவனத்துக்கும் பொதுமக்கள் கொண்டுச்சென்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த அவர், பிரதேச மின் பொறியியலாளருடன் தொடர்புக்கொண்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதேச மின்பொறியியலாளர், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago