2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சித்திரை புத்தாண்டு விழா

Sudharshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, சக்தி இளைஞர் கழகம் நடத்தும் சித்திரை புத்தாண்டு விழா, நாளை (14) காலை 10 மணிக்கு  நடைபெறவுள்ளது.

ஹட்டன், லெதண்டி தோட்ட விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், சிறுவர், இளைஞர், யுவதிகள் மற்றும்  முதியோர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

லெதண்டி தோட்ட முகாமையாளர் நலிந்த டீ அல்விஸ், பிரதேச கிராம உத்தியோகத்;தர் எம்.யோகமலர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் போட்டி நிகழ்வில் அனைவரையும் கழந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர்கள் அழைப்பு விடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .