2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சிதறு தேங்காய்க்கு எதிர்ப்பு: 25,000 தேங்காய்கள் இலவசமாக கையளிப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா மகேஸ்வரி

இடர்முகாமைத்துவ பிரதியமைச்சர் துனேஸ் கங்கத்த, 25,000 தேங்காய்களை இரத்தினபுரி, பெல்மடுல்லை சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிவைத்தார்.

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு எதிராக, கூட்டு எதிர்க் கட்சியினர் சீனிகம தேவாலயத்தில் ஒரு இலட்சம் சிதறு தேங்காய்களை உடைத்தனர். இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தேங்காய்களை இலவசமாக வழங்கியுள்ளார்.  
இத்தேங்காய்களை, பெல்மடுல்லை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதியமைச்சருக்கு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .