2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

சாந்தினிக்கு முக்கிய பதவிகள் தேவையில்லை: லோரன்ஸ்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிவேல் சுதர்ஷினி

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலின் போது சாந்தினிதேவி, கட்சியின் தீர்மானத்துக்கு இணங்கி செயற்படவில்லை. அவ்வாறு இருக்க, அவருக்கு கட்சியின் முக்கிய பதவிகளை வழங்குவது முறையற்ற செயலாகும்;. மத்தியக் குழுவின் தீர்மானமே இறுதி தீர்மானமாகும்' என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.

'மலையக மக்கள் முன்னணியிலிருந்து இம்முறை நாடாளுமன்றத்துக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே, கட்சியின் தலைமை சிறப்பானதாக அமையுமானால், கட்சியின் ஊடாக மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்ற முடியும். அதனடிப்பையிலே கட்சியின் மத்தியக் குழு வீ.இராகிருஷ்ணனை கட்சியின் தலைவாராக ஏகமனதாக நியமித்தது' என்றும் அவர் கூறினார்.

மலையக மக்கள் முன்னிணியின் தலைவராக வி.இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ள கட்சியின் முன்னாள் தலைவரும் மலையக மக்கள் முன்னிணியின் ஸ்தாபகத்தலைவர் சந்திரசேகரனின் மனைவியுமான சாந்தினிதேவியின் கருத்து தொடர்பில், தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனை கூறினார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'கடந்த 2ஆம் திகதி பத்தரமுல்ல, அபேகம கேட்போர் கூடத்தில், கட்சியின் உயர்பீட கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சந்திரசேகரன் சாந்தினிதேவி உட்பட 9 பேர் கலந்துக்கொண்டனர். இதன்போதே, கட்சியின் தலைவராக இராதாகிருஷ்ணனை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை சாந்தினிதேவி ஏற்றுக்கொண்டதுடன், தனக்கு கட்சியில் கௌரவமான பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், கட்சியின் போசகர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  அப்பதவியை வழங்க, உயர்பீடம் தீர்மானித்தது. இந்நிலையில், 8ஆம் திகதி நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில், 33 உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்சியின் தலைவராக இராகிருஷ்ணன், நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சாந்தினிதேவி, தனக்கு கட்சியின் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என மத்தியக் குழு கூட்டத்தில் தெரிவித்தார். ஆனால், மத்தியக் குழு அதற்கு இணக்கம் தெரிவிக்காததையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.

மத்தியக் குழுவில் 37 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் 5 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. ஏனைய 33 உறுப்பினர்களும் சாந்தினிதேவியை செயலாளராக நியமிக்க இணக்கம்காட்டவில்லை' என்றார்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .