2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சூரியகந்தைத் தோட்ட வைத்தியசாலையின் பிரிவுத்தொகுதி திறந்து வைப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இறக்குவானை சூரியகந்தைத் தோட்ட வைத்தியசாலையின் பிரிவுத்தொகுதி (வார்ட்), சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் பி. அபேநாயக்க ஆகியோரால் கடந்த சனிக்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது. 

மேற்படி வைத்தியசாலையில் நாளாந்தம் 200க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் உட்பட கிராமத்து நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருவதோடு, 50க்கும் அதிகமான நோயாளர்கள் தங்கிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்வில் சிங்கராஜ விகாரையின் பௌத்த குரு பூஜ சந்திராநந்த நாஹிமி சப்ரகமுவ மாகாண சபை ஐ.தே.க. உறுப்பினர் யூ. ஆரியவன்ச, பிரதான செயலாளர் பி. குலரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என். பெலிகம்மன, உதவி செயலாளர் எம்.பி.எஸ்.என். குமாரகே உட்பட சூரியகந்தை தமிழ் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .