2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிறிபாத தேசியக் கல்வியியற் கல்லூரிக்கான 2015ஆம் வருட ஆசிரிய மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை

Sudharshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தனை சிறிபாத தேசியக் கல்வியியற் கல்லூரிக்கு 2015 ஆம் வருடத்துக்கான ஆசிரிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இம்மாதம் 18 ஆம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கல்லூரியில் இடம் பெறவுள்ளதாக இக்கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

பத்தனை சிறிபாத தேசியக் கல்வியியற் கல்லூரியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் ஆரம்பப்பிரிவு , விஞ்ஞானம் , கணிதம் ஆகிய பாடநெறிககள் தமிழ் மொழியில் மாத்திரம் முதன்மொழி தமிழ் , சமூகக்கல்வி, பரதநாட்டியம், கர்நாடகம், சித்திரம் ஆகிய பாடநெறிகளும் ஆங்கில மொழியில் மாத்திரம்; தகவல்தொழிநுட்ப பாடநெறி ஆகியவற்றுக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இடம் பெறவுள்ளன.

இந்த நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. நேர்முகப்பரீட்சைக்குச் சமூகம்;தருகின்றவர்கள் பிரதேச செயலகப்பிரிவில் வதிவிடத்தை உறுதி செய்வதற்கான கடிதம், பெற்றோர்களின் தேர்தல் இடாப்பு பதிவு விவரம், பெருந்தோட்டப்பகுதி பெற்றோர்களை உறுதிப்படுத்துவதற்கான உரிய ஆவணங்கள் என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .