Kogilavani / 2016 மார்ச் 03 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சுஜிதா, கு.புஷ்பராஜா
சிறுவனின் கழுத்தில்(9 வயது), சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார் நேற்று(2) மாலை கைதுசெய்துள்ளனர்.
தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவனே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சொற்பேச்சை கேட்காததாலும் குழப்பங்கள் செய்ததாலும் சிறுவனை, நெருப்பில் சூடு காட்டிய கரண்டியால் சுட்டதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதனால், சிறுவனின் கழுத்துப் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே மேற்படி நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிறுவனின் தந்தையை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்.
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago