2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

’சகல வீடுகளுக்கும் குடிநீர் வசதியைப் பெற்றுக்கொடுப்பேன்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

குடிநீர் மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது எனத் தெரிவித்த இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அதனைக் குறைவின்றி ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,  கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்றே குடிநீரும் மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது எனவும் எனவே குடிநீரை நாட்டிலுள்ள சகல மக்களும் குறைவின்றிப் பெற்றுக்கொடுப்பதற்கு, தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெளிவான உத்தரவுகளை வழங்கியுள்ளார் என்றும் எனவே அவரது பணிப்புரைக்கு அமைவாக குடிநீரை நாட்டின் சகல குடிமக்களும் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .