Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை டியன்சின் கெசல்கமுவ ஒயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஏழுபேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று சனிக்கிழமை விடியற்காலை கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் ஏழுபேரும் கைது செய்யபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
இதே வேளை மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யபட்டவர்கள் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இதே வேளை காசல்ரீ நீர் தேக்கத்துக்கு கெசல்கமுவ ஓயா ஆற்றில் இருந்து செல்லும் நீர் மாசடைந்து காணபடுவதாக இலங்கை மின்சாரசபை பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .