Sudharshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
லொறி ஒன்றில் பன்றிக் குட்டிகளை, சட்டவிரோதமாக கொண்டுச் செல்ல முயற்சித்த இருவரை, தலா 25,000 ரூபாய் சரீர பிணையில் செல்ல, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று (10)அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், பொலிஸாரினால் மீட்கப்பட்ட பன்றிக்குட்டிகளை கொழும்புக்குக் கொண்டு செல்லவும் அனுமதி வழங்கியுள்ளார்.
புதன்கிழமை இரவு (09) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அக்கரப்பத்தனையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற, லொறியை சோதனைக்குட்படுத்தியபோது, அனுமதிப்பத்திரமின்றி 11 பன்றிக் குட்டிகள் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, லொறியின் சாரதியையும் உதவியாளரையும் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
மேற்படி இருவரையும் நீமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
42 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
2 hours ago