Mayu / 2026 மே 04 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட், ஹழுவெல்ல பகுதியில் எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி, இரகசியமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை நோர்வூட் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஹழுவெல்ல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு நடைபெறுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இப்பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த 24 முதல் 43 வயதுடைய ஏழு சந்தேகநபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நோர்வூட் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்காக அவர்கள் பயன்படுத்திய பெருமளவிலான உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
24 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago