Kogilavani / 2021 மே 12 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
தொழிற்சங்கங்களுக்கான சந்தா பணத்தை பெருந்தோட்டக் கம்பனிகள் தடுத்து நிறுத்துவதால், மலையக அரசியல், தொழிற்சங்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்
சுமார் ஆறு வருட போராட்டங்களுக்குப் பின்னர், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்துள்ளதாகவும் எனினும் அதனைப் பெற்றுக்கொள்வதில் தொழிலாளர்கள் நிர்வாகக் கெடுபிடிகளை எதிர்கொண்டு வருகின்றனர் தெரிவித்தார்.
இதுவரை நாளொன்றுக்கு 16, 18 கிலோகிராம் பச்சைத் தேயிலை பறித்து வந்த தொழிலாளர்களை, 20 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் என்று, தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருவதுடன் 20 கிலோகிராம் கொழுந்து பறிக்காத தொழிலாளர்களுக்கு, வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தொழிற்சங்கங்களின் செயற்பாட்டை நசுக்கும் நோக்கில், சந்தாப் பணம் அறவிடுவதையும் கம்பனிகள் நிறுத்தியுள்ளன எனத் தெரிவித்தார்.
சந்தாப் பணத்தைத் தடுத்து நிறுத்துவதால் அரசியல் செயற்பாட்டையோ தொழிற்சங்க செயற்பாட்டையோ பெருந்தோட்டக் கம்பனிகளால் தடுத்து நிறுத்திவிட முடியாது என்றும் இனிவரும் காலங்களிலும் இன்னும் வீரியமிக்கதாக தமது தொழிற்சங்க செயற்பாடுகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago