2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சன நெரிசலால் மலைக்கு செல்லாது திரும்பும் பக்தர்கள்

Sudharshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள்  

வெள்ளி மற்றும் சனி ஆகிய இருநாட்களில் நல்லதண்ணி  பாதையினூடாக சிவனொளிபாத மலைக்கு சென்ற யாத்திரிகர்களின் எண்ணிக்கை, இரண்டரை இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக நல்லதண்ணி  பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால்  நல்லதண்ணியிலிருந்து மவுஸ்ஸாகல வரையான 10 கிலோமீற்றர் தூரத்துக்கு, வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, மலை உச்சிக்கு செல்லும் பக்தர்களில் பலர், நெரிசல் காரணமாக மலைக்கு செல்ல முடியாமல் திரும்புவதாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாத்திரிகர்கள் இசைக் கருவிகள் சகிதம் வருவதனால் அவற்றை மலைக்கு எடுத்துசெல்ல அனுமதி மறுக்கும் பொலிஸார், மஸ்கெலியா பொலிஸ் பாதைத் தடையில் வைத்துவிட்டு செல்லுமாறு மக்களை கோரியுள்ளனர்.

மதுபானம் அருந்திவிட்டு யாத்திரை மேற்கொள்பவர்கள்,  போதைப்பொருட்களை கொண்டு செல்பவர்களை  கைதுசெய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் யட்டவர, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இத்தகைய சம்பவங்களை தவிர்த்துக்கொள்ளவும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் பொலிஸ் அதிகாரிகள் பலர், சிவில் உடையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .