2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சப்ரகமுவ மாகாண சபைக்கு ஐவர் தெரிவு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவானிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஐவர், மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக  நேற்று(8), சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன முன்னிலையில் பதவிப் பிராமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு, சப்ரகமுவ மாகாண சபைக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள சபைத் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிமால் விஜேநாயக்க, கே.எல்.ரத்நாயக்க, லஷ்மன் கொடிகார, உபுல் சாமல் பண்டார, சிறில் பல்லேபொல ஆகிய ஐவரே புதிய உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். பொதுத் தேர்தலின்போது, சப்ரகமுவ மாகாண சபையின் ஐ.தே.க உறுப்பினர்களான ஏ.ஏ.விஜேதுங்க, ஹேஷா விதானகே மற்றும் சபையின் எதிர்க் கட்சித் தலைவி  துஷிதா விஜேமான, சுஜித் சஞ்ஜய பெரேரா, சந்தித் சமரசிங்க ஆகிய ஐவரும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியதைத் தொடர்ந்து, மாகாண சபையில் வெற்றிடம் நிலவிவந்தது. இவ்வெற்றிடத்துக்கே மேற்படி ஐவரும் தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களான துஷ்மந்த மித்ரபால, தாரக பாலசூரிய ஆகிய இருவரும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதால், அவர்களின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X