2026 ஜனவரி 21, புதன்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

Niroshini   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில்,  குறைந்த வருமானம் பெறும் கும்பங்களுக்கு, வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் ஆலோசனைக்கமைய, இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் துமற்கட்டமாக, ஏப்ரல் 23ஆம் திகதியன்று, வெளிகபொல, ரங்வல, தேவாலகந்த பிரதேசத்தில், வீடு இன்றி அவதியறும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, வீடு அமைத்துக் கொடுப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வெளிகபொல பிரதேச சபை தவிசாளர் கெலும் ஹேல்லபல்ல, சப்ரகமுவ மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மஞ்சுலா இதிகாவெல உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X