Sudharshini / 2016 ஜூலை 24 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நிவாரணக் கொடுப்பனவு அல்லாமல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நிலையான சம்பள அதிகரிப்பையே கோருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
'முதலாளிமார் சம்மேளனமானது கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதற்கு, அரசியல் பின்புலங்களே காரணம். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் காட்டும் வழியே சிறந்தது' எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர்; ஆறுமுகன் தொண்டமான், பல சுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். தோட்ட கம்பனிகளின் தரப்பிலிருந்து சாதகமான பதில்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. பொருத்தமற்ற காரணங்களை கூறி காலத்தை கடத்துவதே கம்பனிகளின் நிலைப்பாடாக உள்ளது.
கடந்த காலங்களில் கூட்டுஒப்பந்தம் செய்துகொள்வதில் இவ்வாறான காலதாமதம் ஏற்படவில்லை. என்றுமில்லாதவாறு பெருந்தோட்ட கம்பனிகள் இவ்வாறான இழுத்தடிப்புக்களை மேற்கொண்டு வருவதற்கு அரசியல் பின்புலங்களே காரணம்' என்றார்.
4 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago