2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென கோரி, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை (14) பலாங்கொடை நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.

இதன்போது, 'தொழிலாளர்களின் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடாமல் ஒரு வருட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது', 'அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றன', 'தொழிலாளர்களை ஏமாற்றாதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்ட பிரதிநிதி சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .