2026 ஜனவரி 21, புதன்கிழமை

சமுர்த்தி வர்த்தக அபிமானி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன்

ஜனாதிபதியின் விசேட வேலைத் திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் “சமுர்த்தி வர்த்தக அபிமானி” நிகழ்ச்சித் திட்டம், நோர்வூட் சமுர்த்தி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் வின்சன் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கே.குழந்தைவேல் ரவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டதுடன் சமுர்த்தி பயனாளிகளின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், 84 பேருக்கு சமுர்த்தி வங்கியின் ஊடாக கடைகளை அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X