2026 ஜனவரி 21, புதன்கிழமை

சம்பள அதிகரிப்புக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன், எம்.செல்வராஜா, ஆர்.சுரேஸ்குமார், எம்.பாலித ஆரியவன்ச

சம்பள அதிகரிப்புக் கோரி, ஊவா மாகாண அதிபர், ஆசிரியர்கள் இன்று (6) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஊவா மாகாண சபைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்ததுடன் சில பாடசாலைகளின் மாணவர்கள் காலை வேளையிலேயே வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். சுமார் 538 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X