Editorial / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.சுஜிதா, எஸ்.கௌஷி
லிந்துலை, நாகசேனை வலகா தோட்டத்தில், தங்கியிருந்த அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த சின்னராசா மொஹமட் இஷாட் (வயது 33) என்பவரை லிந்துலை பொலிஸார் நேற்று (28) கைதுசெய்துள்ளனர்.
வலகா தோட்டத்துக்கு ஜனவரி மாதம் வருகை தந்த மேற்படிநபர், அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை, இரண்டாம் தாரமாக மணம் முடித்துள்ளார்.
பின்னர் திடீரென தனது ஓட்டோ ஒன்று காணாமற் போயுள்ளதாகத் தெரிவித்து, தனது ஊருக்குத் திரும்பிச் சென்ற அந்நபர், இரு நாள்களுக்கு முன்பே, வலகா தோட்டத்துக்கு மீண்டும் வருகை தந்துள்ளார்.
பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago