Gavitha / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு, இந்திய அரசாங்கம் 95 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
பசுபதி வித்தியாலயம் என்ற பெயரில் 1932ஆம் ஆண்டு அமரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜலிங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையை திறப்பதற்கு அக்காலப் பகுதியில் இந்தியா மற்றும் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக காணப்பட்ட K.B.S. MENAN தனது பாரியாரான சரஸ்வதியுடன் இப் பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்.
அன்றைய தினம் சரஸ்வதியின் பிறந்த தினம் என்பதால், அவருக்கு அன்பளிப்பொன்றை வழங்கும் பொருட்டு, அமரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜலிங்கத்தால், குறித்த பாடசாலையில் பெயர் சரஸ்வதி மத்திய கல்லூரி என்று மாற்றப்பட்டது.
அந்த வரலாற்று காரணத்துக்காக, இந்தியா தனது பூரண செலவில் குறித்த பாடசாலையை அபிவிருத்தி செய்கின்றது. இதனை பார்வையிடுவதற்காக, அண்மையில் இந்திய மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் Y.K.SINHA, உதவி உயர்ஸ்தானிகர் திரு. ஏ. நடராஜன் ஆகியோர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த பாடசாலைக்கான இந்தியாவின் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடலில், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், அதிபர் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி குழுகளுடன் இடம்பெற்றது.
அதன்படி இந்திய அரசின் பூரண ஒத்துழைப்புடன், பாடசாலைக்கான விஞ்ஞான உபகரணத்துடன் கூடிய ஆய்வுக்கூடம், பூரணமான கட்டட திருத்தவேலைகள், மின்சார திருத்தவேலைகள், கணிணனப்பிரிவு மீள் இணைப்பு, விளையாட்டு உபகரணங்கள், சங்கீத மற்றும் கர்நாடக சங்கீதத்துக்கான பொருட்கள், இந்தியாவுக்கான உயர்கல்வி புலமைப்பரிசில், போக்குவரத்துக்கான பேருந்துகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்ற பல வேலைத்திட்டங்கள், இத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .