Kogilavani / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஏனைய சலுகைகளை தோட்ட நிர்வாகம் நிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொகவந்தலாவை பொகவான குயினா தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட கொழுந்து மடுவத்துக்கு முன்பாக, இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படித் தோட்டத்தின் மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே, இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படித் தோட்டத்தில், சிறுவர் நிலையங்களில் பணிப்புரிந்த உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் ஆகியோர் தோட்ட நிர்வாகங்களினூடாகக் குறைக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை காலமும் 15 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறித்து வந்த தொழிலாளர்கள், 20 கிலோகிராம் கொழுந்துப் பறிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுதாகவும் தெரிவித்தனர்.
பறிக்கப்பட்ட கொழுந்தில் ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு 40 ரூபாய் விலை நிர்ணியிக்கப்பட்டதாகவும் இந்தத் தொகைக்கு 20 கிலோகிராம் கொழுந்துப் பறிக்க முடியாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே தொழிலாளர்களுக்கான ஏனைய சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago