R.Maheshwary / 2022 மார்ச் 07 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மட்டக்களப்பில் இருந்து வந்ததால் தான் சாணக்கியனுக்கு மல்லியப்பு சந்தி எது, ஹட்டன் அம்பிகா சந்தி எது என தெரியாமல் போய் உள்ளது என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயம் தொடர்பில் ஹட்டன், மல்லியப்பு சந்தியில் நேற்று (6) முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
மல்லியப்பு சந்தியில் கூட்டம் நடத்துமாறு சாணக்கியனே எங்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் மட்டக்களப்பில் இருந்து வந்த அவருக்கு மல்லியப்பு சந்தி எது, ஹட்டன் அம்பிகா சந்தி எது என தெரியாமல்போனது, அது அவரின் குறைபாடே தவிர, எமது குறைப்பாடு அல்ல. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்கு நாம் ஆதரவு. இலங்கை முழுவதும் செல்வதற்கான தைரியம் எமக்கு இருக்கின்றது." என்றார்.
அத்துடன், நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியும், அதனை வென்றெடுக்க முடியாத வக்கற்ற பாராளுமன்ற உறுப்பினர்களே நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்றனர் என தெரிவித்த அவர், அன்றாடம் கோஷம் எழுப்பும் அரசியல் எமக்கு தேவையில்லை. உரிமை அரசியலே எமக்கு முக்கியம் என்றார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026