2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சாரதி மீது தாக்குதல்; ஒருவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுஜிதா  

தலவாக்கலை நகரில், நேற்று (13) இரவு குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்கான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த முச்சக்கர வண்டியை, மிடில்டன் வீடமைப்பு திட்டத்துக்குச் செல்ல வேண்டும் என, வாடகைக்கு அமர்த்த வந்த 5 பேர் கொண்ட குழுவினர், குறித்த நபரை தாக்கியுள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பில், ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் மது அருந்தி இருந்ததாகவும், தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தாக்குதலுக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதி தெரிவித்துள்ளார். 

அத்தோடு, தான் அணிந்திருந்த ரீசேர்ட்டை கிழித்து விட்டதாகவும் கிழிந்த உடையுடனேயே தான் தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தன்னை தாக்கியமைக்கான காரணம் என்னவென்று தனக்கு தெரியாது என்றும் தாக்குதலுக்கள்ளான சாரதி மேலும் கூறினார். 

தாக்குதலுக்கு இலக்கான சாரதி, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இவ்வாறு சில குண்டர்கள் இரவுவேளைகளில் மது அருந்தி விட்டு வந்து, தலவாக்கலையிலுள்ள சில முச்சக்கரவண்டி சாரதிகளை தாக்குவதும் அச்சுறுத்துவதுமான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக, தலவாக்கலை டி பார்க் முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .