2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சின்ன இங்கிலாந்தில் வெளிநாட்டு கஞ்சா செடி: ஒருவர் கைது

Editorial   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு cட்பட்ட பிளக்பூல் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை விசேட அதிரடி படையினர் இன்று (15) மாலை 4 மணியளவில் கைது செய்தனர்.

 பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள தனிவீடு ஒன்றில்  கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை  அடுத்து  நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட  நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களால் வளர்க்கப்பட்ட 70 தொடக்கம் 77 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கஞ்சா செடிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது எனவும் ,  வீட்டில் மூன்று அறைகளில் வளர்த்து வந்ததாகவும் கைது  செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நுவரெலியா பிளக்பூல் பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகிறதா  என்றக் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
( டி.சந்ரு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X