R.Maheshwary / 2022 ஜூன் 16 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் தவறான வரிக்கொள்கைகளும், பிரதான காரணமாகும்." - என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரஜா சக்தி திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
நாவலப்பிட்டி- இம்புல்பிட்டிய பிரதேசத்துக்கான குடிநீர் திட்டத்தினை திறந்து வைக்கும்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டு மக்களுக்கு இன்று ஏதேனுமொரு விடயத்துக்காக வரிசைகளில் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை வெகுவிரைவில் மாறி, இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எனவே, மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் ஆதரவு வழங்கும்.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் வரி வருமானம் குறைக்கப்பட்டது. இதனால் அரச வருமானம் பாதிக்கப்பட்டது. தற்போதை நெருக்கடி நிலைமைக்கு இதுவும் ஓர் பிரதான காரணமாகும்.
இனம், மதம், மொழி, கட்சி என 'பிரித்தாளும் தந்திரம்' மூலம் தமது இருப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசியல் வாதிகள் முற்பட்டனர். அந்த மாய வலைக்குள் மக்களும் சிக்கினர். இன்றைய பின்னடைவுக்கு மக்கள் பிரிந்து நின்றமையும் ஓர் காரணம். எனவே, நாம் இலங்கையர்களாக பயணிப்போம்.
சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை ஆதரிப்போம். அதனால்தான் தற்போதை சூழ்நிலையில் இ.தொ.கா. நடுநிலை நிலைப்பாட்டை வகித்துவருகின்றது." - என்றார்.
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago