2025 ஜூலை 10, வியாழக்கிழமை

சிறுமி பாலியல் வன்கொடுமை ; சித்தப்பாவின் சகோதரன் கைது

Janu   / 2025 ஜூலை 09 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வெலிமடையாய பகுதியில்   12 வயதுடைய  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குறித்த சிறுமியின் சிறிய தந்தையின் (தாயின் இரண்டாவது திருமண கணவர்) சகோதரன் செவ்வாய்க்கிழமை (08) அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமி பாடசாலையில் உள்ள ஆசிரியரிடம் தெரிவித்ததையடுத்து, பாடசாலை அதிபரால்  பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.  

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமனசிறி குணதிலக


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .