Editorial / 2019 மே 19 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால உறுப்பினரும் நிர்வாக சபை உறுப்பினரும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரமான காளிமுத்து சிவசாமி, தனது 57ஆவது வயதில், சனிக்கிழமை (18) காலமானார்.
அவரது பூதவுடல் ஹட்டன், மணிக்கவத்தைத் தோட்டத்திலுள்ள அவரது வீட்டில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (20) மாலை தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அவரது பூதவுடலுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .