செ.தி.பெருமாள் / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லதண்ணி நகரில் காணப்படும் தனியார் வாகனத் தரிப்பிடத்தில், சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகளின் வாகனங்களைத் தரிப்பதற்கு, அதிகளவு கட்டணங்கள் அறவிடப்படுவதாக, யாத்திரிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு, ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொரு முறையில் கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் எவ்வாறாயினும், தங்களது வாகனங்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு வசதிகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரச்சினை காரணமாக, வாகன சாரதி அல்லது யாத்திரைக்கு வரும் யாராயினும், வாகனத்திலேயே, இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக, மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர்
எம். ராஜவீரனின் வினவியபோது, வாகன தரிப்பிடத்தில் அதிகளவு கட்டணங்கள் அறவிடப்பட்டால், அது தொடர்பாக தமக்குத் தெரியப்படுத்துமாறும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நல்லதண்ணி நகரில் இயங்கும் ஏனைய வாகனத் தரிப்பிடங்களுக்கு, தமது பிரதேச சபையில் பதிவு இல்லை என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான அதிகாரியுடன் கலந்தாலோசித்து, வர்த்தமானி ெவளியிட்டபின்னர் நடைமுறைபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago