R.Maheshwary / 2022 மார்ச் 02 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
சிவராத்திரி பூஜைக்கு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று, அங்கு வணங்கிவிட்டு, ஓட்டோவில் வீடு திரும்பிய ஒருவரின் கை சிலரால் துண்டாக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை- புவக்கொடமுல்லவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஒருவரின் கையே இவ்வாறு துண்டாக்கப்பட்டு அவர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் உடுவர தோட்டத்தில் ஒன்றாக வசித்த போது, இருவருக்குமிடையில் நீண்டகால பகை ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து காயமடைந்த நபர், புவக்கொடமுல்ல பகுதிக்கு வசிக்க சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரொக்கில் காளி கோவிலில் நேற்று (1) நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு வீடு திரும்பிய நிலையில், ஓட்டோவில் வருகைத் தந்த ஐவரடங்கிய குழுவினர் ஓட்டோவை குறுக்காக நிறுத்தி அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓட்டோவிலிருந்து இறங்கிய ஓடிய அவர், 300 மீற்றர் தூரம் வரை ஓடியபோது, சந்தேகநபர்கள் துரத்தி பிடித்து கையை வெட்டி துண்டாக்கியுள்ளனர்.
இதனையடுத்து கையை இழந்தவர், சுவசெரிய அம்பியூலன்ஸ் மூலம் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பதுளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026