Editorial / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.சங்கீதன்
வரலாற்று சிறப்புமிக்க, நுவரெலியா, சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் சீதையம்மனுக்கு, முதற் தடவையாக, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட, வெள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட வெள்ளி பாதம், விசேட பூஜைகளுடன் அணிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாண்டிசேரியைச் சேர்ந்த, சமூக சேவகரும் ஆன்மீகவாதியுமான என்.பாலகிருஸ்ணன் குடுபத்தினரின் நன்கொடையில், இந்த வெள்ளி பாதம் நிர்மாணிக்கப்பட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, இராமருக்கும், சீதையம்மனுக்கும் விசேட பூஜைகளும், அபிஷேகம் அழங்காரமும் உட்பட, ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி பாதம் இன்று (24) அணிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, ஆலய பரிபாலன சபையின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான, வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பக்த்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago