Kogilavani / 2021 மே 05 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த இரண்டு தினங்களாக நீடித்துவரும் கடும் மழையுடன்கூடிய வானிலை காரணமாக, 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில், 123 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொகுபோத்தாகம தெரிவித்துள்ளார்.
கடுங்காற்றுடன் கூடிய மழை, இடி,மின்னல் தாக்கம், வெள்ளப்பெருக்கு காரணாமகவே மேற்படிக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பெல்மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
நிவித்திகல, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, எஹலியகொட, கஹவத்த, கிரிஎல்ல, கொலொன்ன மற்றும் கொடகவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago