Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மே 20 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சுத்தமான குடிநீர் கேட்டு ப்ரௌன்ஸ்வீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலும் புளும்பீல்ட் தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள வீதியிலும், செவ்வாய்க்கிழமை (20) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான பிரவுன்ஸ்வீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் 235 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த அசுத்தமான குடிநீரையே பருகவேண்டிய நிலையில் உள்ளனர்.
புளூம்பீல்ட் பாடசாலையில் தரம் ஒன்று முதல் 13 வரை கல்வி பயிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
“தங்களுக்கு, கடந்த பல வருடங்களாக அசுத்தமான குடிநீரே வழங்கப்படுகின்றது. மழை காலத்தில் குடி நீர் பெறப்படும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த நீரையே தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆகையால், அங்கு உள்ள வாய்க்கால்கள் அனைத்தும் ஆழப்படுத்த வேண்டும். அங்கு அமைக்கப்பட்டுள்ள மதகை உயர்த்தி பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர். தங்களுடைய கோரிக்கை தொடர்பில்,நோர்வூட் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
34 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago