R.Maheshwary / 2022 மார்ச் 08 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். யோகா
காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்காக, விரிக்கப்பட்டிருந்த சுருக்கு வலையில் சிக்கிக்கொண்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுற்றித்திரிந்த காடெருமை, பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை வைத்திய குழுவால் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
கம்பளை- மொறகொல்ல பிரதேசத்தில் விரிக்கப்பட்டிருந்த வலையிலேயே, அந்த காடெருமை சிக்கிக்கொண்டது.
இது தொடர்பாக கம்பளை கால்நடை வைத்திய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்ததன் பின்னர், பேராதனை பல்கலைகழக கால் நடை வைத்தியர்கள் குழு, அந்த காட்டெருமைக்கு நேற்று (7) மயக்க மருந்தை ஊசி செலுத்தியது. காட்டெருமை மயங்கியதன் பின்னர், வலையிலிருந்து காலை மீட்டு, சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டது.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026