Niroshini / 2021 மே 09 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.கேதீஸ்
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், தலவாக்கலை நகரை அபிவிருத்திச் செய்யவுள்ளதாக, தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் தலைவர் லெட்சுமன் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், தலவாக்கலை நகரம் நுவரெலியா நகருக்கு மிகவும் அண்மித்த நகரம் என்பதால், அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற என்றும் மிகவும் அழகான ஓர் இடமாக தலவாக்கலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ் தலவாக்கலை மேல்கொத்மலை பிரதேசத்தில் காணப்படுகின்ற காணிகளை இனங்கண்டு கடைத்தொகுதிகளை அமைக்கவுள்ளதாகவும் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்தப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வதற்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
உணவுகளை உட்கொள்வதற்கான இடங்கள், படகுச் சவாரிகள், தங்குமிட வசதிகள், மலசலகூட வசதிகள், வீதியின் இரு மருங்கிலும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கடைத்தொகுதிகள், புதிய சந்தைக் கட்டடத்தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஞாயிறு சந்தையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago