Editorial / 2019 டிசெம்பர் 20 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}



எஸ்.கணேசன், பூவரசன்
பதுளை - எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்று, இடிந்து விழுந்ததில், அதில் தங்கி இருந்த 3 வெளிநாட்டவர்கள் காயமடைந்து தெம்மோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (20) அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றதாக, தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மூவரும் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டடம் குறித்து ஆராய்வதற்காக கொழும்பில் இருந்து கட்டட ஆய்வுப் பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளது.
குறித்த கட்டடத்தின் நிர்மானப் பணிகள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என்று, அனர்த்த முகாமைத்துவ மய்யம் சந்தேகம் வெளியிட்டிருக்கிறது.
அத்தோடு பண்டாரவளை- தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மலையகத்துக்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும் புகையிரத பாதையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .