2025 மே 19, திங்கட்கிழமை

செபஸ்தியார் ஆலய சிலை தகர்ப்பு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

   ராமு தனராஜா

  லுணுகலை -அடாவத்தை எல்டராடோ பிரிவின் புனித செபஸ்தியார் தேவாலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபம்  சில விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.  

நேற்றிரவு தேவாலயத்தின் முன்றலில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபத்தை அகற்றி, அதனை எல்டராடோ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் கொண்டு சென்று  நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.   

  குறித்த விடயம் சம்பந்தமாக பிரதேச மக்கள்  லுணுகலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, பதுளை குற்றவியல் பிரிவின் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் ஆரம்ப கட்ட விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை சந்தேகநபர் எவரும்  கைது செய்யப்படாத நிலையில், இந்து கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக வசித்து வரும் இந்தப் பிரதேசத்தில் ஒரு சில விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த செயற்பாடானது, மதங்களுக்கிடையிலான  ஒற்றுமையை சீர்குலைக்க செய்யும் முயற்சியாக இருக்கலாம்  என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X