மு.இராமச்சந்திரன் / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள், வேட்புமனுவில், நேற்று (17) கையொப்பமிட்டனர். இந்நிகழ்வு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையில், கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை ஆகிய பிரதேச சபைகள், ஹட்டன் -டிக்கோயா, தலவாக்கலை ஆகிய நகர சபைகள் ஆகியனவற்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து, சேவல் சின்னத்திலும், அம்பகமுவ பிரதேச சபை மற்றும் நுவரெலியா மா நகரசபை ஆகியனவற்றில், தனித்து சேவல் சின்னத்திலும் இ.தொ.காவினர் போட்டியிடவுள்ளனர்
மேலும், கொத்மலை, அங்குராகெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
இதேவேளை, தலவாக்கலை- லிந்துலை நகரசபை மற்றும் நுவரெலிய மாநகரசபை ஆகியனவற்றுக்கான வேட்பு மனுக்கள், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
31 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago