2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

சைப்ரஸ் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2025 நவம்பர் 09 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள், எஸ். சதீஸ் 

ஹட்டன்-மஸ்கெலியா சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான சாலையில் வனராஜா பகுதியில்  ஒரு சைப்ரஸ் மரம்   ஞாயிற்றுக்கிழமை(09) காலை 8.15 மணியளவில் விழுந்தது.

மரம் விழுந்ததில் சாலையில் வாகன போக்குவரத்து சுமார் 40 நிமிடங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இருப்பினும், வனராஜா தோட்ட கிராம மக்களும் ஹட்டன் காவல்துறையினர் விழுந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, சாலை தற்போது வாகன போக்குவரத்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சாலை ஓரமாக உள்ள ஆபத்தான பாரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன சாரதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .