Kogilavani / 2016 மார்ச் 30 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
பலாங்கொடையிலிருந்து ஹட்டன் வழியாக கண்டி,திகனவுக்கு இன்று(30) அதிகாலை பயணித்த டிப்பர்ரக வாகனம், வீதியை விட்டுவிலகி 50 அடி பள்ளதில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உரம் ஏற்றுவதற்காக பொகவந்தலாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த மேற்படி வாகனமானது, ஹட்டனிலிருந்து பலாங்கொடை நோக்கி சென்ற ஜீப் வண்டிக்கு, இடமளிக்க முற்பட்ட போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் வாகனத்தின் சாரதியும் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .